மட்டக்களப்பு வெல்லாவெளி காவல்துறைப் பிரிவிலுள்ள திக்கோடை வயல் பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை மாலை மோட்டார் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து மெற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது குறித்த வயல் பிரதேசத்தின் நிலத்திலிருந்து பழுதடைந்த நிலையில் குறித்த மோட்டார் குண்டு மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட குண்டு வவுணதீவு விசேட அதிரடிப்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் அதனை செயலிழக்கச் செய்வதற்கு நீதிமன்ற உத்தரவு பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெல்லாவெளி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
Spread the love
Add Comment