தேவையேற்பட்டால் சட்டம் ஒழுங்கு அமைச்சராக புதியவர் ஒருவரை நியமிப்பேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கியதேசிய கட்சி குழுவினரை சந்தித்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்
இலங்கையின் காவல்துறையின் அதிகாரத்தை தான் பொறுப்பேற்ற பின்னர் தன்னை கொல்வதற்கான சதி முயற்சிகள் தொடர்பில் விசாரணைகள் சிறப்பாக இடம்பெறுகின்றன எனத் தெரிவித்த ஜனாதிபதி இவ்வாறான விசாரiணைகள் உரிய விதத்தில் சட்டத்தின் அடிப்படையில் இடம்பெறவேண்டும் என தான் குறிப்பிட்டு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்
இதேவேளை தான் விசாரணைகளை உரிய முறையில் முன்னெடுப்பேன் என அமைச்சர் ரஞ்சித்மத்து பண்டார தெரிவித்தமைக்கு சீற்றத்துடன் பதிலளித்துள்ள ஜனாதிபதி முன்னைய அரசாங்கத்தல் விசாரiணைகள் உரிய முறையில் இடம்பெறவில்லை எனவும் சட்டம் ஒழுங்கு அமைச்சுக்கு பதில் பிரதமர் அலுவலகமே விசாரணைகளை கையாண்டது எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ரஞ்சித் மத்துபண்டாரவிடம் சட்டமொழுங்கு அமைச்சராக நீங்கள் பதவி வகித்த போதும் உங்கள் வேலையை பிரதமர் அலுவலகம்தானே செய்தது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்
Add Comment