இலங்கை பிரதான செய்திகள்

வடக்கில் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை, தடுத்து நிறுத்துங்கள்…

தமிழ் மக்களின் வரலாற்றை கண்டுகொள்ளாமல் உணர்வுகளை மதிக்காமல் தொல்லியல் திணைக்களம், மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம், வனவள திணைக்களம் ஆகியன வடக்கில் மேற்கொண்டுவரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்துங்கள் என எழுத்துமூல கோரிக்கை ஒன்றிணை வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 14 பேருக்கும் அனு ப்பிவைத்திருக்கின்றார்.

அந்த எழுத்துமூல கோரிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறிய செயற்பாடுகள் வடமாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக வன்னி பெருநிலபரப்பில் இடம் பெறுவதால் மத ரீதியான முரண்பாடுகள் ஏற்படுத்தப்படுகின்றன.

எங்கெங்கே மலைப்பகுதி காணப்படுகின்றதோ அங்கெல்லாம் பௌத்த ஆலயங்களை அடாத்தாக அமைக்கும் முயற்சிகளில் ஈடுபடுவது ஒருபுறமும், தமிழர்களின் பாரம்பரிய இந்து ஆலய பிரதேசங்களை பௌத்த பிரதேசங்களாக மாற்றுவதும், அவற்றின் செயற்பாடுகளுக்கு இடையூறு செய்வதுமாகவே இத் திணைக்களத்தின் செயற்பாடுகள் உள்ளன.

உதாரணமாக வவுனியா வடக்கு பிரதேச செயலர் பகுதியில் உள்ள வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்திற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள தடைகள் பற்றி குறிப்பிடலாம். மலை உச்சியில் அமைந்துள்ள ஆதிசிவலிங்க ஆலயத்தை தரிசிப்பதற்கு செல்வதற்கென அதன் நிர்வாக சபையால் அமைக்கப்பட்ட உருக்கு கம்பி ஏணியை பொருத்துவதற்கு பொலிசார் மூலம் அச்சுறுத்தி தடை ஏற்படுவதுடன் குழாய்க் கிணறு அமைப்பதையும் தடை செய்துள்ளனர். இந்த தடைகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.

வன பாதுகாப்பு திணைக்களம், வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் என்பன தான்தோன்றித்தனமாக பல பிரதேசங்களை தமது  கட்டுப்பாட்டு பிரதேசமாக பிரகடனப்படுத்தி எமது மக்களின் வாழ்வாதார முயற்சிகளுக்கு இடையூ றாக செயற்படுகின்றன. இந்த மூன்று திணைக்களங்களும் பெரும்பான்மை இனத்தவரையே உயர் அதிகாரிகளாக கொண்டுள்ளதால் தமிழ் மக்களின் வரலாறு மற்றும் உணர்வுகள் கணக்கில் எடுக்கப்படாது புறக்கணிக்கப்பட்டே வருகின்றன.

எனவே இத் திணைக்களங்களின் இரண்டாம் நிலை உயர் அதிகாரி கட்டாயமாக ஒரு தமிழராக இருப்பது உறுதி செய்யப்படுதல் வேண்டும்.  தொல்பொருளியல் திணைக்களம், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எந்த ஒரு இடத்தையும் தொல்லியல் ஒதுக்கு பிரதேசமாக பிரகடனப்படுத்துவதற்கு அல்லது தலையிடுவதற்கு முன்பு அந்தந்த பிரதேச செயலகத்தில் சேவையாற்றும் கலாச்சார உத்தியோகத்தர் மூலம் மாகாண கலாசார திணைக்களத்தின் பணிப்பாளரின் ஒத்திசைவை பெற்றுக்கொள்வது அவசியமானது.

இவற்றை அரசாங்கத்தின் நிர்வாக பணிப்புரைகள் மூலம் நிறைவேற்ற முடியும் என்பதால் அவற்றிற்கான முன்னெடுப்புக்களை மேற் கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.என கோரியுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers