கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்திப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இன்று(25) கிளிநொச்சிக்கு பயணம் செய்துள்ளார்.
கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட நாமல் ராஜபக்ஸ பாரதிபுரம், பன்னங்கண்டி, கல்லாறு, பாடசாலைகளில் தர்மபுரம் பொது நோக்கு மண்டபத்தில் தங்கியுள்ள மக்களையும் சந்தித்துள்ளார். இந்த பயணத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் கலந்துகொண்டார்.
Add Comment