இலங்கைக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 178 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுள்ளது.
நியூஸிலாந்துக்கு சென்றுள்ள இலங்கை அணி நியூஸிலாந்து அணியுடன் இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் ஒரு இருபதுக்கு 20 போட்டியில் விளையாடி வருகின்ற நிலையில் முதலாவதாக டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிந்திருந்தது.
இந்தநிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று கிரைஸ்ட் சேர்ச்சில் ஆரம்பமான நிலையில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி களத்தடுப்பினை தெரிவு செய்தது.இதனையடுத்து முதலாவதாக துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 50 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 178 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுள்ளது.
இலங்கை அணி சார்பாக சுரங்க லக்மால் 5 விக்கெட்டுக்களையும், லஹிரு குமார 3 விக்கெட்டுக்களையும், தில்றூவான் பெரேரா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றியுள்ளனர்.
Add Comment