பிரதான செய்திகள் விளையாட்டு

நியூசிலாந்துக்கெதிரான முதலாவது இன்னிங்சில் இலங்கை 104 ஓட்டங்களே பெற்றுள்ளது.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிரைஸ்ட் சேர்ச்சில் நேற்று ஆரம்பமானது. இதில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்ததனையடுத்து முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 178 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இந்தநிலையில் தமது முதலாவது இன்னிங்சை ஆரம்பித்த இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 104 ஓட்டங்களை மட்டுமே பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பாக மத்தியூஸ் அதிகூடிய ஓட்டங்களாக 33 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றார். நியூசிலாந்து அணி சார்பாக டெரன்ட பொள்ட் 6 விக்கெட்டுக்களையும் டிம் சௌத்தி 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளனர்.
110 ஓட்டங்கள் முன்னிலை வகிக்கும் நியூசிலாந்து அணி தற்போது தனது 2 ஆவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.