இந்தியாவில் மிகப் பெரிய தீவிரவாதத் தாக்குதல் நடத்துவதற்கு ஐ.எஸ். ஆதரவு பெற்ற குழு ஒன்று தீட்டிவந்த திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு முகாமை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பில் தலைநகர் டெல்லியிலும், உத்தரப்பிரதேசத்திலும் 17 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் ஒரு பெண் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
அவர்கள் தற்கொலைத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாகவும், வெடிகுண்டு தயாரித்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஹர்கத்-உல்-ஹர்ப்-இ-இஸ்லாம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனவும் இந்த அமைப்பு ஐ.எஸ். அமைப்பின் தொடர்புகளோடு செயல்பட்டு வந்ததாகவும் டெல்லியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தேசிய புலனாய்வு முகாமை தெரிவித்துள்ளது
இந்த அமைப்புக்கு பணம் உதவி செய்த அம்ஹோராவைச் சேர்ந்த மத போதகரான முப்தி சுஹைல் என்பவர் இணையத்தின் மூலம் வெளிநாட்டில் செயல்பட்டு வரும் ஒரு நபரோடு தொடர்பில் இருந்ததாகவும் இவர் வட்ஸ்ப் மற்றும் டெலிகிராம் செயலிகளின் உதவியோடு உரையாடி வந்துள்ள நிலையில் சில மாதங்களுக்கு முன்புதான் இந்த குழு செயல்படத் தொடங்கியதாகவும் தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட அனைவரும் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும், வெல்டிங் கடை உரிமையாளர், பொறியியலாளர், முச்சக்கரவண்டி சாரதி பட்டப்படிப்பு மாணவர் போன்ற மாறுபட்ட பின்புலங்களைச் சேர்ந்தவர்கள் இவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Add Comment