இலங்கை பிரதான செய்திகள்

வெள்ளம் அனர்த்தம் தொடர்பாக ரணில் தலைமையில் விசேட கலந்துரையாடல்…


கடந்த 21 ஆம் திகதி கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் திடீரென ஏற்ப்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக இரு மாவட்டங்களும் பல்வேறு பாதிப்புக்களை சந்தித்துள்ளது அந்தவகையில் கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று 28-12-2018 பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் அமைச்சர்களான, ரஞ்சித் மத்தும பண்டார, றிசாட்பதியுதின்,தயாகமகே, j.c அலவத்துவல, இராஜாங்க அமைச்சர்களான விஜயகலா மகேஸ்வரன், ஹரிசன் டீ சில்வா, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன், மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், டக்ளஸ் தேவானந்தா, சரவணபவன், சாந்தி சிறீஸ்கந்தராஜா, சிவஞானம் சிறீதரன், சாள்ஸ்நிர்மலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவமோகன் வடமாகாண ஆளுநர், றெஜினோல்ட் குரே காவற்துறைமா அதிபர், இராணுவ உயர் அதிகாரிகள், , கிளிநொச்சி ,முல்லைத்தீவு அரச அதிபர்கள் திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.