சினிமா பிரதான செய்திகள்

சீமானின் இயக்கத்தில் நடிக்கும் சிம்பு :


நடிகர் சிம்பு, சீமான் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்.   வந்தா ராஜாவாதான் வருவேன், மாநாடு படங்களை முடித்த பின்னர், சிம்பு அடுத்ததாக  இத் திரைப்படத்தில் நடிக்கின்றார்.

செக்கச் சிவந்த வானம் திரைப்படத்திற்கு பின்னர், சிம்பு தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தில் சிம்புவின் நாயகியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார்.

இந்த படத்தை முடித்த பின்னர், சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் ஜனவரியில் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இரண்டாவது பாகத்திலும் சிம்பு நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில், சீமான் இயக்கத்தில் சிம்பு  புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தற்கால சூழலுக்கு ஏற்ப அந்த படம் உருவாகுவதாகவும், இதில் சிம்பு மருத்துவராக நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 13 other subscribers