குடிக்க தண்ணீர் கொடுக்காமல், கடும் வெயிலில் சங்கிலியால் கட்டி வைத்து ஐந்து வயது பெண் குழந்தையை உயிரிழக்க செய்த சம்பவம் தொடர்பில் ஐ.எஸ் இயக்கத்தை சேர்ந்த பெண் உறுப்பினர் ஒருவர் ஜெர்மனியில் போர்க்குற்ற விசாரணையை எதிர்கொண்டுள்ளார்.
ஜெர்மனியை சேர்ந்த 27 வயதான ஜெனிபர் என்பவரும் அவரது கணவரும், கடந்த 2015ஆம் ஆண்டு ஐ.எஸ் கட்டுப்பாட்டிலிருந்த ஈராக்கின் மொசூல் நகரத்திலிருந்து அந்த சிறுமியை தங்களது வீட்டுக்கு கொத்தடிமையாக கொண்டு வந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் உடல்நிலை பாதிப்படைந்த சிறுமியை, ஜெனிபரின் கணவர் வீட்டிற்கு வெளியே சங்கிலியால் கட்டி வைத்ததாகவும் உடல்நிலை மோசமடைந்து உயிருக்கு போராடிய சிறுமியை காப்பாற்றுவதற்குரிய எந்த நடவடிக்கையையும் ஜெனிபர் எடுக்கவில்லை எனவும் விசாரணை அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இது குறித்த விசாரணை ஜெர்மனியின் முனிச் நகரத்திலுள்ள தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்ற நிலையில் ஜெனிபர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2014ஆம் ஆண்டு ஈராக்கிற்கு சென்ற ஜெனிபர், ஐ.எஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Add Comment