சினிமா பிரதான செய்திகள்

2018இல் அதிக திரைப்படங்களில் நாயகனாக நடித்தவர் விஜய் சேதுபதி :


தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக திரைப்படங்களில் நடித்துவரும் விஜய் சேதுபதி,  2018இல் அதிக திரைப்படங்களில் நடித்த நடிகர்களில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

தமிழ் சினிமா திரைப்படங்களில் மிகவும் குறைந்தளவு கதாநாயகர்களே காணப்படுகின்றனர். அதிலும் 10 நடிகர்கள் மாத்திரமே முன்னணி கதாநாயகர்களாக விளங்குகின்றனர். தெலுங்கு திரையுலகத்துடன் ஒப்பிடுகையில் இது மிக குறைந்த எண்ணிக்கையாகும்.

இந்த ஆண்டு தமிழ் திரைப்படங்களாக 171 படங்கள் வெளியாகி உள்ளன. கதாநாயகர்களில் விஜய் சேதுபதி அதிக எண்ணிக்கையாக ஏழு திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், ஜூங்கா, செக்கச்சிவந்த வானம், 96, சீதக்காதி ஆகியவை கதாநாயகனாக நடித்தவை. டிராபிக் ராமசாமியும், இமைக்கா நொடிகளும் கௌரவத் தோற்றத்தில் நடித்த படங்கள் ஆகும்.

விஜய் சேதுபதிக்கு அடுத்த நிலையில், பிரபுதேவா, கௌவுதம் கார்த்திக், விக்ரம் பிரபு, விதார்த் ஆகியோர்  மூன்று படங்கள் விகிதமும், ரஜினிகாந்த், விக்ரம், தனுஷ், விஷால், ஜெயம் ரவி, விஷ்ணு விஷால், அரவிந்த்சாமி, அதர்வா, விஜய் ஆண்டனி, ஜெய், விமல், ஜி.வி.பிரகாஷ், தினேஷ் ஆகியோர் இரண்டு படங்கள் விகிதமும் நடித்துள்ளனர். கமல்ஹாசன், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், உதயநிதி, சிம்பு, கார்த்தி, ஜீவா, ஆர்யா ஆகியோர்  ஒரு திரைப்படத்தில் மாத்திரம் நடித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.