இலங்கை பிரதான செய்திகள்

கொக்குவிலில் வாள் வெட்டுக்குழுவை விரட்டியடித்த இளைஞர்கள்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


யாழ்.கொக்குவில் பகுதியில் வாள் வெட்டுக்குழுவை இளைஞர்கள் ஒன்றிணைந்து விரட்டியடித்துள்ளனர். கொக்குவில் மேற்கு பிடாரி அம்மன் ஆலய பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு வாள் வெட்டுக்குழு நடமாடியுள்ளனர்.

அத்துடன் அப்பகுதியில் உள்ள வீடொன்றின் முன்னால் கதிரையில் உட்காந்திருந்த வீட்டின் உரிமையாளர் மீது மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட குழு வாள் வெட்டினை மேற்கொள்ள முயன்றுள்ளனர்.

அதன் போது அவர் அபாய குரல் எழுப்பியவாறு வீட்டினுள் ஓடியுள்ளதனைடுத்து வாள் வெட்டு குழுவினர் கதிரையை வெட்டி சேதப்படுத்தியுள்ளனர்.

வீட்டு உரிமையாளரின் அபாய குரலை அடுத்து அயலவர்களும் அப்பகுதியில் கரப்பந்தாட்டம் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்களும் அவ்விடத்திற்கு விரைந்ததனையடுத்து வாள் வெட்டுக்குழு அங்கிருந்து தப்பிசென்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.