இன்றைய தினத்துக்குள் நாட்டின் அனைத்து மாகாணங்களினதும், ஆளுநர்களையும் பதவிவிலகுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பணிப்புரை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய, வடக்கு வடமேல் மத்திய மாகாண சபைகள் கலைந்துள்ள நிலையில் ஊவா மேல் மற்றும் தென் மாகாணங்கள் கலைக்கப்படவுள்ளன. இந்த நிலையிலேயே அனைத்து மாகாண சபைகளினதும் ஆளுநர்களை இன்றைய தினத்துக்குள் பதவிவிலகுமாறு ஜனாதிபதி பணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love
Add Comment