குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்ப்பாணம் மாநகர் குரூஸ் வீதியிலுள்ள வீடொன்றில் இன்று அதிகாலை இரண்டரைம் பவுண் நகை உள்ளிட்ட பெறுதியான பொருட்கள் களவாடப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வீட்டிலுள்ள குடும்பத்தினர் யாழ்.மரியன்னை தேவாலயத்தில் இடம்பெற்ற புத்தாண்டு ஆராதனையில் பங்கேற்றிருந்த போதே இந்தக் களவு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டின் பின் பக்கக் கதவை உடைத்து உள்நுழைந்த திருட்டுக் கும்பல் வீட்டுக்குள் சல்லடை போட்டுத் தேடி, இரண்டரைப் பவுண் நகை, பணம் மற்றும் பெறுமதியான பொருள்களைக் களவாடி சென்றுள்ளன. சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரால் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் இடம்பெறுகின்றன’ என்று யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
Add Comment