இலங்கை பிரதான செய்திகள்

யாழ் அரியாலையில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பலி


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்ப்பாணம் அரியாலை துண்டிச் சந்திப் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.  யாழ்ப்பாணம் ஈச்சமோட்டைப் பகுதியைச் சேர்ந்த 24 வயதான ஏ. ராவின் 33 வயதான மற்றும் கே.சுதர்சன்  ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் இளைஞர்கள் இருவரும் வீதியில் பயணித்துக்கொண்டு இருந்த வேளை , மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மதிலுடன் மோதுண்டு இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த இருவரினதும் சடலங்கள் யாழ்.போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.