முஃயோகபுரம் மகா வித்தியாலயத்தில் மீண்டும் ஆரம்பப் பிரிவு வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 1962ம் ஆண்டளவில் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் தரம் ஒன்று தொடக்கம் க.பொ.த. உயர்தரம் வரையில் வகுப்புக்கள் நடைபெற்று வந்தவேளையில் அப்போதய அரசின் சுற்று நிருபங்களுக்கமைவாக 2013ம் ஆண்டு தை மாதம் தொடக்கம் இப்பாடசாலையின் ஆரம்பப்பிரிவை வேறுபாடசாலைகளுக்கு மாற்றப்பட்டது.
எனினும் இப்பகுதிப் பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் ஆகியோரின் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கமைவாக வடமாகாணக் கல்வியமைச்சினதும், மாகாணக் கல்வித்திணைக்களத்தினதும் அனுமதியுடன் துணுக்காய் வலயக்கல்விப் பணிமனையின் ஒழுங்குபடுத்தலுடன் 2018ம் ஆண்டுதொடக்கம் தரம் 01 இற்கான மாணவர்களை இணைத்து ஆரம்பப் பிரிவு வகுப்புக்கள் ஆரம்பமாகியுள்ளது.
ஆர்வமுள்ள பெற்றோர்கள் தமது பிள்ளைகளை இப்பாடசாலையில் தரம் 01இல் இணைத்துக் கொள்ளலாம் என்பதனை பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் தெரிவித்துக்கொள்ளுகின்றனர்.
Add Comment