Home உலகம் பிரபல சைக்கிளோட்ட வீராங்கனை வாகன விபத்தில் காயம்

பிரபல சைக்கிளோட்ட வீராங்கனை வாகன விபத்தில் காயம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரபல சைக்கிளோட்ட வீராங்கனை கரோலின் புச்சனன் சைக்கிள் விபத்தில் காயமடைந்துள்ளார். கரோலின், இரண்டு தடவைகள் ஒலிம்பிக் பதக்கங்களையும், உலக சம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சொந்த இடமான அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற கார் விபத்தில் கரோலின் காயமடைந்துள்ளார்.

27 வயதான கரோலின் இரத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை இன்ஸ்ரகிரம் ( ஐளெவயபசயஅ ) ல் இட்டுள்ளார். திட்டமிட்டவாறு 2017ம் ஆண்டு நிறைவடையவில்லை எனவும், விபத்தினால் காயமடைந்த தாம் தற்போது தேறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் இந்த விபத்து இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More