இலக்கியம் பிரதான செய்திகள்

“எம்மவர்களானாலும், தவறிழைத்தால் அதற்கான தண்டனையை வழங்க ஜனாதிபதி – பிரதமர் தீர்மானம்”

இந்த அரசாங்கத்தை சேர்ந்தவர்களானாலும் தவறிழைத்தால் தண்டிக்க பிரதமர் மற்றும் ஜனாதிபதி தயாராக உள்ளதாக, அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சபுகஸ்கந்தை சுத்திகரிப்பு நிலைய ஊழியர்களை சந்தித்த போதே இதனைத் தெரிவித்துள்ளார்

இவ் வருடமானது வரலாற்றிலேயே அதிக கடன் செலுத்திய வருடம் எனவும், தாம் முடிந்தளவு கடனை முகாமைத்துவம் செய்ய முயற்சிப்பதாகவும், நாட்டு மக்களுக்கு கடன் சுமை இன்றி இவற்றைச் செலுத்த நடவடிக்கை எடுப்பதாவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

கொள்ளையர்களை பிடிக்கவில்லை என, நான் சில வேளைகளில் குழப்பத்துடன் இருப்பேன். அது எனக்கு பெரிய பிரச்சினை. ஆனால் எமது அரசாங்கத்தைச் சேர்தவர்களானாலும், தவறிழைத்தால் அதற்கான தண்டனையை வழங்க எமது ஜனாதிபதி மற்றும் பிரதமர் தற்போது தீர்மானித்துள்ளனர்என அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply