சினிமா பிரதான செய்திகள்

நடிகை ஐஸ்வர்யா ராயை தனது தாய் என்று கூறும் ஆந்திர இளைஞர்


முன்னாள் உலக அழகியும் பொலிவூட் நடிகையுமான ஐஸ்வர்யா ராயை தனது தாய் என்று ஆந்திர இளைஞர் ஒருவர் கூறியிருப்பது பொலிவூட் திரையுலகில் சரச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவை சேர்ந்த சங்கீத் குமார் என்ற இளைஞரே இவ்வாறு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

இருபத்தொன்பது வயதான சங்கீத் குமார் நடிகை ஐஸ்வர்யா ராயை தனது தயாரார் என்றும் செயற்கை கருத்தரித்தல் முறையில் 1998ஆம் ஆண்டு லண்டனில் ஐஸ்வர்யா ராய் தன்னை 15 வயதில் பெற்றெடுத்தார் என்றும் சர்ச்சைபடத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நடிகர் அபிஷேக்கிடம் இருந்து பிரிந்து தனியாக வாழும் தன் தாய் ஐஸ்வர்யா ராயை > தான் பராமரிக்க வேண்டும் என்றும் அந்த இளைஞர் கூறியுள்ளார். அத்துடன் ஐஸ்வர்யா ராயின் தாயார் பிருந்தா கிருஷ்னராஜ் ராயால் தான் இரண்டு வயது வரை வளர்க்கப்பட்டதாக கூறியுள்ளார்.

தன்னுடைய தாத்தா கிருஷ்ணராஜ் கடந்தாண்டு மார்ச் மாதம் இறந்துவிட்டதாகவும் தனது முகத்தில் தன்னுடைய தாயாரான ஐஸ்வர்யா ராயின் சாயல் உள்ளதாகவும்   சங்கீத் குமார் தெரிவித்துள்ளார்.
சங்கீத் குமாரின் இந்த பேச்சு அதிரவைத்தாலும், தன்னுடைய கூற்றிற்கு எந்தவித ஆதாரத்தையும் அவரால் கொடுக்கமுடியவில்லை. ஐஸ்வர்யா ராய் நடிகையாவதற்கு முன்னர் 1994ஆம் ஆண்டு உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது அவருக்கு 44 வயது ஆகிறது என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.