Home உலகம் இனி தனியாக எவரஸ்ட் சிகரம் செல்ல முடியாது – மாற்றுத் திறனாளிகளுக்கும் தடை :

இனி தனியாக எவரஸ்ட் சிகரம் செல்ல முடியாது – மாற்றுத் திறனாளிகளுக்கும் தடை :

by admin


தனியாக எவரஸ்ட் சிகரம் செல்ல முடியாது என்று நேபாள அரசு சட்டத் திருத்தம் ஒன்றை நிறைவேற்றுவதற்கான ஒப்புதலை அளித்துள்ளது. விபத்துக்களை தவிர்ப்பதற்கான முயற்சியாகவே இந்த சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

இது தொடர்பில் இமயமலை நாட்டின் மலையேற்ற ஒழுங்குமுறைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக  நேபாள கலாச்சார துறை, சுற்றுலா மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து செயலாளர் மஹேஷ்வர் நீப்பானே சர்வதேச ஊடகம் ஒன்றிடம் கருத்துத் தெரிவித்துள்ளார்.  இதற்கு நாடாளுமன்றத்தில் அனுமதி வழங்கப்பட்டதாகவும் பாதுகாப்போடு மலையேறவும் இறப்பு எண்ணிக்கைகளை குறைக்கவுமே இந்த சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனுபவம் வாய்ந்த சுவிட்சர்லாந்து மலையேறி யூலி ஸ்டெக் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் எதிர்பாராமல் தன் உயிரை விட நேர்ந்தாகவும் எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகிலுள்ள நுப்சே சிகரத்தை நோக்கி மலை முகட்டுப் பாதையில் தன்னந்தனியாக அவர் சென்றுகொண்டிருந்தபோது செங்குத்தான அம்மலைப்பகுதியிலிருந்து கீழே விழுந்தாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை தங்கள் குறைபாடுகளை மறக்க, எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியைத் தொட்டு வல்லமை மிக்க சாதனைகளை எட்ட நினைக்கும் இரண்டு கால்களும் இன்றி செயற்கைக் கால்களோடு வருபவர்களுக்கும் பார்வையற்ற மலையேறிகளுக்கும், மலைஏறல் தடை விதிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நேபாள அரசின் இந்த முடிவையும் கருத்துக்களையும் எதிர்த்து ஆயிரக்கணக்கான மலையேறிகள் நேபாளத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் போரில் தனது கால்கள் இரண்டையும் இழந்த ஆர்வ மிக்க எவரெஸ்ட் மலையேறி ஹரி புத்தா மகார், இந்தத் தடைச்சட்டம் பாரபட்சமானதாக உள்ளது.ஒருவேளை இந்த சட்டத்தை அமைச்சரவை நிறைவேற்றுமேயானால் மாற்றுத் திறனாளிகளுக்கு எதிரான பாரபட்சமான ஒரு செயலாகவே இது அமையும். மனித உரிமைகளை உடைக்கக் கூடியது என்று குறிப்பிட்டுள்ளார்.

மாற்றுத்திறனாளி சாதனையாளர்கள்

நியூசிலாந்தைச் சேர்ந்த மார்க் இங்லிஸ், பனிப்பொழிவில் தனது கால்களை இழந்தவர், 2006-ல் 8,848 மீட்டர் (29,029 அடி) சிகரத்தில் உச்சத்தை அடைந்த முதல் மாற்றுத்திறனாளி ஆவார். பார்வை குறைபாடுமிக்க அமெரிக்க எரிக் வீயன்மயர் மே 2001 இல் எவரெஸ்டை அடைந்தார், அதன் பின்னர் அவரது சாதனையை முறியடிக்க யாருமின்றி, ஏழு கண்டங்களிலும், மிக உயர்ந்த சிகரங்களை அடைந்த ஒரே பார்வை குறைபாடுடைய நபர் ஆகவும் வெற்றிவாகை சூடினார்.

மலையேற உகந்த தட்பவெப்பம்

எவரஸ்ட் உலகில் உயரமான மலைச் சிசகரம். நேபாள நாட்டில் மாத்திரம் 8,000 மீட்டர் நீளமுள்ள உலகின் உயரமான 14 சிகரங்கள் உள்ளன.  ஒவ்வொரு வசந்த காலத்திலும் இலையுதிர் காலத்திலும் மலையேறுபவர்களுக்கு தெளிவான தட்பவெப்ப நிலைகளை தரக்கூடியதாக இமயமலையின் இச்சிகரங்கள் உள்ளன.

கிட்டத்தட்ட 450 மலையேறிகள் இதில் 190 வெளிநாட்டவர்கள் மற்றும் 259 நேபாளிகள் – கடந்த ஆண்டு நேபாளத்தில் தெற்கில் இருந்து எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தனர். தனியே சென்று மலைச்சிகரத்தை எட்டுவதுதான் சாதனை, இதை நேபாள அரசு தடைவிதித்துள்ளதே என புதிய சாதனை முயற்சிகளுக்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருபவர்கள் தங்கள் ஏமாற்றத்தைத் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More