இந்தோனேசியாவில் பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தோனேசியாவின் சுமந்திரா தீவில் இருந்து 55 பயணிகளுடன் புறப்பட்ட படகே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது. இந்தநிலையில் படகோட்டியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் முசி என்றில் ஆற்றில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்திருந்தனர். இந்தநிலையில் ஒரு வாரத்தில் மட்டும் இந்தோனேசியாவில் இரு படகு விபத்துகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தோனேசியாவில் 17 ஆயிரம் தீவுகள் காணப்படுகின்றமையினால் மக்கள் அதிகமாக படகுகள் மூலம் பயணம் மேற்கொள்கின்ற நிலையில் அங்கு அதிகளவில் படகு விபத்துகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment