இந்தியா சினிமா பிரதான செய்திகள்

ரஜினிகாந்த், மலேசியா பிரதமர் நஜீப் ரசாக்கை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார்:-

நட்சத்திர விழாவில் பங்கேற்க மலேசியா சென்றுள்ள ரஜினிகாந்த், அந்நாட்டு பிரதமர் நஜீப் ரசாக்கை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு நிதி திரட்டுவதற்காக தமிழ் நடிகர் சங்கத்தைச் சேர்ந்த சுமார் 350 நடிகர், நடிகைகள் மலேசியா சென்றுள்ளனர். அங்கு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினி நேற்று மலேசியா சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், இன்று மாலை நடிகர் ரஜினி மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்கை அவரது மாளிகையில் சந்தித்தார். ரஜினிகாந்தின் ரசிகரான நஜீப் கடந்த முறை இந்தியா சென்ற போது, ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அவருக்கு ரஜினி சிறப்பு விருந்தளித்தார். இந்த நிலையில், மலேசியா சென்ற ரஜினியை நஜீப் தனது மாளிகைக்கு அழைத்த பிரதமர் நஜீப்புடன் ரஜினிகாந்த் கலந்துரையாடியுள்ளதுடன், சிறப்பு விருந்திலும் கலந்துகொண்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply