Home சினிமா தேவைப்பட்டால் விஜயை பாட வைப்பேன்…

தேவைப்பட்டால் விஜயை பாட வைப்பேன்…

by admin

விஜயியின் 62 படத்தில், தேவைப்பட்டால் விஜயை பாட வைப்பேன் என ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த நடிகர் விஜயின் ‘மெர்சல்’ படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட் என்பதால், விஜயியின் 62 பாடத்திலும் இந்த கூட்டணி இணைவது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் 62 பற்றி பேட்டியளித்துள்ள ரகுமான் “முருகதாஸுடன் 10 வருடங்களுக்கு பிறகு இணைவது மகிழ்ச்சியைத் தருகிறது. எப்போதும் அவர் பாடல்களை வித்யாசமாக படமாக்குபவர். விஜய் 62 பாடல்கள் ‘மெர்சல்’ பாடல்களைப் போல் இல்லாமல் வித்தியாசமாக இருக்கும். தேவைப்பட்டால் விஜய்யை படத்தில் பாடவைப்பது பற்றி பரிசீலிக்கப்படும்“ என ஏ.ஆர்.ரஹ்மான் தெிவித்தார்.

விஜய்-முருகதாஸ் இணையும் மூன்றாவது படம் விஜய்- 62. இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ். மெர்சல் போல் இந்த படத்திற்கும் இசையமைக்க ஆஸ்கர் நாயகன் வந்துள்ளார்.

இப்படி ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ள இந்த படத்தின் சூட்டிங் இந்த மாத இறுதியில் துவங்க உள்ளது. எனினும் நேற்று திடீரென போட்டோ ஷூட் நடத்திவிட்டது படக்குழு.
திடீரென வெளியான விஜயின் இந்த காணொளி மற்றும் ஒளிப்படங்கள் மூலம் ஒரு சின்ன முடிவிற்கு வரமுடியும் எனக் கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய்க்கு இரண்டு பாத்திரங்கள் எனக் கூறப்பட்டது.

அதில் வரும் ஒரு விஜய் தான் இது. அவர் கொடுக்கும் போஸ் எல்லாம் நமக்கு நினைவுபடுத்துவது அவருடைய அலட்டிக்கொள்ளாத மாஸ் மட்டுமே. ஒரு க்ளாசான பிசினஸ் மேனாக இருக்க வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் அவர் வைத்திருக்கும் அந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் , Virtue மொபைல் போன் அவர் நடந்துகொள்ளும் விதம் என எல்லாமே நமக்கு உணர்த்துவது ஒரு செம்ம க்ளாசான பிஸ்னஸ்மெனாக இருப்பார் எனக் காட்டுகிறது.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More