சினிமா பிரதான செய்திகள்

தளபதியுடன் கைகோர்த்த கீர்த்தி சுரேஷ் – I miss you விஜய் – ரகுல் பிரீத்திசிங் …


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தில் நடிப்பதற்கு,  கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டதை அடுத்து,  முன்னணி நடிகையான ரகுல் பிரீத்திசிங்கிற்கு கிடைக்கவிருந்த வாய்ப்பு தவறவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புத்தகம், என்னமோ ஏதோ இ தடையற தாக்க படங்களில் தமிழில் நடித்த ரகுல் பிரீத்திசிங் பின்னர் வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு பட உலகத்துக்கு சென்று அங்கு முன்னணி நடிகை ஆனார்.

அதன்பின்னர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்த ஸ்பைடர் படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்த அவர் கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று படத்திலும் நடித்திருந்தார்.

அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் ஆகியவற்றிலும் ரகுல் பிரீத்திசிங் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியிருந்த போதிலும் இப்போது விஜய் படத்தில் ரகுல் பிரீத்திசிங் நடிக்கவில்லை.

இதில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தம் ஆகி உளடளதனால் விஜய்யுடன் நடிக்க வந்த வாய்ப்பு கை நழுவி போனதால் ரகுல் பிரீத்திசிங் கவலையடைந்துள்ளாராம். . எனினும் செல்வ ராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் சூர்யா 36 படத்தில் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் என இருவரும் நடிக்க இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply