உலகம் பிரதான செய்திகள் விளையாட்டு

சென்னை சூப்பர் கிங்ஸ் துடுப்பாட்ட பயிற்சியாளராக மைக்கல் ஹஸ்ஸி :


முன்னாள் அவுஸ்திரேலிய துடுப்பாட்டக்காரரும் , சென்னை சூப்பர் கிங்ஸ் வீரருமான மைக்கல் ஹஸ்ஸி  (Michael Hussey) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பங்காற்றிய வீரர் மைக்கல்  ஹஸ்ஸி 64 போட்டிகளில் 2213 ஓட்டங்கள் பெற்றிருந்தார். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிக ஓட்டங்களைப் பெற்ற மூன்றாவது வீரராகவும் திகழ்ந்தார். 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட்டின் போது அதிக ஓட்டங்களை எடுத்தமைக்காக ஒரேஞ்ச் தொப்பியையும் வென்றிருந்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராகத் திரும்பியது தனக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிக்கிறது எனவும் சென்னை அணியின் ஒரு வீரராக தனக்கு நிறைய மலரும் நினைவுகள் உள்ளன எனவும் மைக்கல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.