இலங்கை பிரதான செய்திகள்

2ஆம் இணைப்பு – பட்டம் ஏற்ற சென்ற சிறுவனின் உயிரும் பறந்துபோனது…


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பட்டம் ஏற்ற சென்ற சிறுவன் வயல் கிணற்றினுள் தவறி விழுந்து உயிரிழந்து உள்ளார். இச் சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்று உள்ளது. ஆவரங்கால் நடராஜா இராமலிங்கம் மகா வித்தியாலயத்தில் , தரம் 06 இல் கல்வி கற்கும் ஆவரங்கால் கிழக்கை சேர்ந்த சதிஸ்குமார் லிஷாந் (வயது 11) எனும் மாணவனே உயிரிழந்தவர் ஆவார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது ,

சிறுவனின் தாயார் வீட்டிற்கு அருகில் மரண சடங்குக்கு சென்று இருந்த சமயம் , தகப்பனார் கடைக்கு சென்று இருந்தார். அச் சமயம் சிறுவன் வீட்டில் இருந்து வெளியேறி வீட்டிற்கு அருகில் உள்ள வயல் தரவைக்கு பட்டம் ஏற்ற சென்றுள்ளார். வீடு திரும்பிய பெற்றோர் சிறுவனை காணாது உறவினர்களுடன் இணைந்து தேடிய போது , வீட்டிற்கு அருகில் உள்ள வயல் தரவை கிணற்றின் அருகில் பட்டமும் பட்டம் ஏற்றிய நூலினையும் கண்டுள்ளனர்.

அதனை அடுத்து கிணற்றினுள் பார்வையிட்ட போது , சிறுவன் கிணற்றினுள் சடலமாக காணப்பட்டு உள்ளார். அதனை அடுத்து அச்சுவேலி பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு உடல் கூற்று பரிசோதனைக்காக வைத்திய சாலையில் ஒப்படைத்துள்ளனர்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap