இலங்கை பிரதான செய்திகள்

“ஏக்கிய இராச்சியத்திற்கு இணங்கினோம் அதிகாரப் பகிர்வில் நெகிழமாட்டோம்”…..

ஏக்கிய இராச்சிய என்பததற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு இணங்கிய போதும் அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் விடயத்தில் கூட்டமைப்பு நெகிழ்வு தன்மையை காட்டாது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் பருத்தித்துறையில் நடைபெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் பொது கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளாhர்

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க சொன்னவர்கள் இப்போது தாங்கள் எல்லாவற்றையும் செய்து கொடுப்போம் என சொல்கிறார்கள். எப்படி பெற்று கொடுக்க போகிறீர்கள் என கேட்டால் அதற்கு அவர்களிடம் பதில் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் தாங்கள் சில விடயங்களில் இணங்கியிருக்கிறோம் எனவும் குறிப்பாக ஏக்கிய இராச்சிய என்பதில் தாங்கள் இணங்கியிருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் சிங்கள மக்கள் மத்தியில் சமஷ்டி என்றால் நாட்டை பிரிப்பது என்ற கருத்தே உள்ளது எனவும் தான் சிங்கள மக்களை சந்தித்து பேசுகிறபோது நாட்டை பிரிக்கும்படி நாங்கள் கேட்கவில்லை எனவும் பூரணமானதும், மீள பெறமுடியாததுமான அதிகாரங்களை தருமாறே கேட்கிறோம் எனவும் விளக்கமளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகள் விடயத்தில் விட்டு கொடுப்புக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராக இல்லை எனவும் அரசாங்கத்தின் செயற்பாடுகளிலும், இடைக்கால அறிக்கையிலும் தங்களுக்கும் பூரணமான திருப்தியில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வந்திருப்பது ஒரு இடைக்கால அறிக்கைஎனவும் அந்த இடைக்கால அறிக்கையிலேயே இந்தளவு விடயங்களை சாதிக்க முடிந்தமையில் தமக்கு பூரணமான திருப்தி இருக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளர்h.

அத்துடன் இந்த விடயத்தில் ஊடகங்களும் பொய்யை சொல்கின்றன எனத்தெரிவித்த சுமந்திரன் அரசியல்வாதிகளை விடவும் ஊடகங்கள் மோசமானவர்களாக மாறியிருக்கின்றன எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல்வாதிகள் மக்களை கவருவதற்காக பொய்களை சொல்வதனைப் போல் ஊடகங்கள் பணத்திற்காக மோசமான பொய்யை சொல்லிக் கொண்டிருக்கின்றன எனவும் தெரிவித்துள்ளர்h.

1 Comment

Click here to post a comment

Leave a Reply

  • வாக்குகளை பெற, தங்கள் இருப்பை பாதுகாக்க, தமிழ் அரசியல்வாதிகள் மக்களுக்கு மோசமான பொய்களைச் சொல்லுவார்கள். சில ஊடகங்கள் பணத்திற்காக மோசமான பொய்களைச் சொல்லுவார்கள் மற்றும் வேறு சில ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்வார்கள்.