இந்தியா சினிமா பிரதான செய்திகள்

சமூகத்தைப் போலவே கலையும்   சாதியால் பிரிந்து கிடக்கிறது – கபாலி ரஞ்சித்:-

சமூகத்தைப் போலவே கலையும்   சாதியால் பிரிந்து கிடக்கிறது எனவும்  அவற்றை ஒன்று சேர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது எனவும் இயக்குநர் பா ரஞ்சித் தெரிவித்துள்ளார். பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் மற்றும் மெட்ராஸ் ரெக்கார்ட்ஸ் இணைந்து ஒருங்கிணைத்துள்ள  தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்ஸ் இசை நிகழ்ச்சி சென்னையில்  நேற்றையதினம் நடைபெற்றது.

அதற்கு  முன்னதாக, கான, ரப், ரொக் மூன்று வடிவங்களையும் கலந்து நடைபெற்ற   இந்நிகழ்ச்சியின் அறிமுகக் கூட்டத்தின் போது பத்திரிகையாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்ஸ் இசை நிகழ்ச்சியிpல் பங்குபெற்றிருக்கும் கலைஞர்கள்   அவரவர் பகுதிகளில் மிக பிரபலமானவர்கள் எனவும்  அவர்கள் எல்லோரையும் ஒருங்கிணைத்து, மக்களின் இசையாகிய கானாவை உலகம் முழுவதும் பரப்புகிற முயற்சியில் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன் சாதியால் பிரிந்து மக்களுக்கான அரசியல் பேசவும், மக்களின் பிரச்சனைகளைப் பேசவும் கலையை பயன்படுத்த வேண்டும். சாதி, மதமற்ற இணக்கம் கலையின் எல்லா வடிவத்திலும் கொண்டுவர வேண்டும். இந்த சமூகம் சாதியால் பிரிந்து கிடப்பது போலவே கலையும் இங்கு பிரித்து வைக்கப்பட்டுள்ளது. அப்படி தமிழகத்தின் எல்லா கலைகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதற்கான தேவை இங்கு இருக்கிறது. அயோத்திதாச பண்டிதர் கூறியது போல சாதியற்ற தமிழர்களாக இணைவது முக்கியம். அதற்கு இந்த இசை வடிவம் தொடக்கமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளர்.

மேலும்  கானா என்பது மக்களின் இசை, மூடப் பழக்க வழக்கங்களை எதிர்க்கிற இசை. அது போல தான் ரப் இசையும் அது கறுப்பின மக்களி;ன்  வாழ்வியலையும், அவர்களின் போராட்டங்களையும் உலகிற்கு எடுத்துச் சொன்னது.  அதனடிப்படையில் பார்த்தால் ரப் இசையும், கானாவும் வேறு வேறில்லை. இரண்டுமே மக்களின் வலியை, துயரத்தை பேசக் கூடியவை. இரண்டையுமே இணைத்து இந்த தி கேஸ்ட்லெஸ்   இசை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply