உலகம் பல்சுவை பிரதான செய்திகள்

உழைப்பை உறிஞ்சி, உயர்ந்த பின் கைவிரித்த மகன்களும், பாடம் புகட்டிய வயோதிபத் தாயும்…

முதுமையில் தன்னைப் பராமரிக்காத மகன்களிடம் இருந்து நஷ்ட ஈடு கேட்டு, தாய்வான் தாய் தொடர்ந்த வழக்கில் £554,000 பவுண்ஸ் நஷ்டஈடு வழங்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். கணவரிடம் விவகாரத்து பெற்ற தைவானை சேர்ந்த பெண் லுவே. தனது 2 புத்திரர்களையும், கஷ்டப்பட்டு தனியாக வளர்த்தார். இவர்கள் இருவரையும் பல் வைத்தியத் துறையில் கற்பித்து வைத்தியர்களாக உருவாக்கினார். முதுமையில் தன்னை தன் பிள்ளைகள்இருவரும் கை விட்டு விடுவார்களோ என அஞ்சிய லுவோ, பிற்காலத்தில் பல் மருத்துவமனையில் இருந்து கிடைக்கும் லாபத்தில் 60 சதவீதத்தை தனக்கு வழங்க வேண்டும் என ஒரு ஒப்பந்தம் தயார் செய்து கையெழுத்து வாங்கினார்.

அதன்படி மகன்களும் தனது தாயாருக்கு Tw$22.33m ($744,000). வளங்குவதாக இணக்கம் தெரிவித்திருந்தனர். கல்வி முடிந்து வைத்தியத் துறையில் அதிகளவு வருவாயைப் பெற்ற ஆண்மக்கள் இருவரும் வயதாகிப் போன தாய் லுவோவுக்கு, அளித்த வாக்குறுதிபடி 10 கோடியே 50 லட்சத்தை வழங்கவில்லை. பணம் எதுவும் தரமுடியாது எனக் கூறி பராமரிக்கவும் மறுத்து விட்டனர்.

அதனைத் தொடர்ந்து லுவோ தைவான் நீதிமன்றில், ஆண்மக்கள் இருவர் மீதும் வழக்கு தொடர்ந்தார். ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தப்படி தனக்கு Tw$22.33m ($744,000).  வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிமன்றம் தாய் லுவோவுக்கு அவரது மகன்கள் . £554,000 பவுண்ஸ் நஷ்டஈடு வழங்க வேண்டும் தீர்பளித்தது…

Add Comment

Click here to post a comment

Leave a Reply