இலங்கை பிரதான செய்திகள்

ஊழல் மோசடிகளை இல்லாதொழிக்கும் திட்டம் எம்மிடம் உண்டு – ஜே.வி.பி.


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஊழல் மோசடிகளை இல்லாதொழிக்கும் திட்டங்கள் எம்மிடம் உண்டு என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். கிராமத்தையும், நகரத்தையும் கட்டியெழுப்புவதற்கு ஊழல் மோசடிகளை இல்லாதொழிக்க வேண்டியது அவசியமாகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அநேகமான கட்சிகளில் இம்முறை தேர்தலுக்கு போட்டியிடும் தரப்பினர் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் எனவும் கட்சி விட்டு கட்சித் தாவியவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கிராமத்தையும், நகரத்தையும் கட்டியெழுப்பும் சக்தியும் பலமும் ஜே.வி.பி கட்சிக்கே உண்டு என குறிப்பிட்டுள்ள அவர் இது தொடர்பிலான திட்டம் விரைவில் நாட்டுக்கு மக்களுக்கு வெளிப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். ஜே.வி.பி கட்சி மட்டுமே ஊழல் மோசடிகளற்ற நேர்மையான வேட்பாளர்களை தேர்தலில் களமிறக்கியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap