குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தம்மை அரசியலிலிருந்து ஓரம் கட்ட முயற்சிப்பதாக முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். மத்திய வங்கி பிணை முறி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையின் பிரதியொன்றை தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தின் அடிப்படையில் தமக்கு வழங்குமாறு இன்று ரவி கருணாநாயக்க கோரியிருந்தார். இவ்வாறு கோரிக்கை விடுத்ததன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.
மேலும் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என அவர் வலியுறுத்தியுள்ளார். அரசியல் இருப்பிற்காக இவ்வாறு தம்மை இலக்கு வைத்து பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள அவர் அரசாங்கத்தில் உள்ள மற்றும் எதிர்க்கட்சியில் உள்ள சிலர் தமக்கு எதிராக சூழ்ச்சி செய்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எவை என்பது கூட தமக்குத் தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Add Comment