உலகம் பிரதான செய்திகள் விளையாட்டு

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுடன் தொடர்புடையவர்கள் மீது சைபர் தாக்குதல்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுடன் தொடர்புடைய தரப்புக்கள் மீது சைபர் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகின் பிரபல இணைய பாதுகாப்பு நிறுவனங்களில் ஒன்றான மெக்கெபே நிறுவனம் இது குறித்து அறிவித்துள்ளது.  ஒலிம்பிக் போட்டித் தொடருடன் தொடர்புடைய மிக முக்கியமான தகவல்களை களவாடுவதற்கு இணையத்திருடர்கள் முயற்சித்து வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் தென்கொரியாவின் சியோல் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. யார் இந்த தாக்குதல்களை நடத்துகின்றார்கள் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. எனினும் இனி வரும் நாட்களிலும் இவ்வாறான சைபர் தாக்குதல் முயற்சிகள் முன்னெடுக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் கணக்குகளில் ஊடுறுவுதல், கடவுச் சொற்களை திருடுதல், நிதி தரவுகளை களவாடுதல் என பல்வேறு வழிகளில் சைபர் தாக்குதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply