இலங்கை பிரதான செய்திகள் விளையாட்டு

இலங்கை கிரிக்கட் அணியின் தலைவராக மீண்டும் அஞ்சலோ மத்தியூஸ்

இலங்கை கிரிக்கட் அணியின் தலைவராக மீண்டும் அஞ்சலோ மத்தியூஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச ஒருநாள் போட்டிகள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகளுக்கு தலைவராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதேவேளை பங்களாதேசில் இடம்பெறவுள்ள இலங்கை, பங்களாதேஸ் மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியின் விபரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.


அந்தவகையில் இலங்கை அணியில்

அஞ்சலோ மத்தியூஸ், உபுல் தரங்க, தனுஷ்க குணதிலக, குசல் மெண்டிஸ், தினேஷ் சந்திமால், குசல் ஜனித் பெரேரா, திஸர பெரேரா, அசேல குணரத்ன, நிரோஷன் திக்வெல்ல, சுரங்க லக்மால், நுவன் பிரதீப், துஷ்மந்த சமீர, ஷெஹான் மதுஷங்க, அகில தனஞ்சய, லக்ஷான் சந்தகான், வனிது ஹசரங்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply