இந்தியா பிரதான செய்திகள்

திருப்பதி ஏழுமலையானுக்கு சக்தியிருந்தால் அவருக்கு எதற்கு காவல்? கனிமொழி மீது முறைப்பாடு:-

Chennai: DMK Rajya Sabha MP Kanimozhi arrives for the party’s high level meeting in Chennai on Wednesday. PTI Photo by R Senthil Kumar (PTI4_27_2011_000093B)

திருச்சி மாநாட்டில் திருப்பதி வெங்கடாஜலபதியை விமர்சித்ததாக ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி மீது காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் வீரமாணிக்கம் சிவா என்பவர், இன்று காலை இது குறித்து சென்னை மாநகர காவல் ஆணையரிடம் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளார்.

அதில், கடந்த 06ம் திகதி திருச்சியில் நடந்த மாநாட்டில், திருப்பதி ஏழுமலையானுக்கு சக்தியிருந்தால் அவருக்கு எதற்கு காவல் என திமுக ராஜ்யசபா உறுப்பினர்    கனிமொழி கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 150 கோடி இந்துக்களின் மனது புண்பட்டுவிட்டதாகவும், பக்தர்களுக்கு இந்த கருத்து மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், கனிமொழியை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டுமெனவும் அதில் கோரப்பட்டுள்ளது

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.