இலங்கை பிரதான செய்திகள்

மூளைக்குள் இரும்புதகட்டை செருகி இரகசியத்தை பெற முயற்சித்தனர் என தயா மாஸ்டரை தாக்கியவர் தெரிவிப்பு


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிலையத்தின் கலையகத்துக்குள் கத்தி, பொல்லுடன் அத்துமீறி நுழைந்து நிறுவனத்தின் செய்திப் பணிப்பாளர் மீது தாக்குதல் நடாத்திய வயோதிபரை வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள குறித்த தொலைக்காட்சி நிறுவன கலையகத்துக்கு நேற்று திங்கட்கிழமை மாலை வயோதிபர் ஒருவர் அத்துமீறி நுழைந்து பணியிலிருந்த செய்திப் பணிப்பாளர் தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வே.தயாநிதியை அந்த தாக்கினார். அவ்வேளை அங்கு கூடிய நிறுவன ஊழியர்கள் முதியவரைத் மடக்கி பிடித்து அவரை காவல்துறையினரிடம்  ஒப்படைத்தனர். முதியவரிடம் நேற்றுமாலை தொடக்கம் இன்று மாலைவரை  காவல்துறையின தீவிர விசாரணைகளை மேற்கொண்டனர்.

‘முதியவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போன்றே வாக்குமூலம் வழங்கினார். தனது மூளைக்குள் இரும்புத் தகட்டைச் சொருகி குறித்த தொலைக்காட்சி நிறுவனத்தினர் தன்னிடமுள்ள இரகசியங்களை பெற முயற்சித்தனர் . என்னிடம் கைபேசியில்லை, எனது மூளைக்குள் மெமரிக்காட் உள்ளது. அது தேவையான போது கைபேசியாகப்பயன்படுத்துவேன்’ என மனநிலை பாதிக்கப்பட்டவராக அவர் விசாரணையின் போது நடந்துகொண்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

20 வருடங்களுக்கு மேலாக அவர் ஐரோப்பிய நாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பிய குறித்த முதியவர் தற்போது யாழ்.பிரதான வீதியுள்ள அந்தியகால சேவை நிறுவனத்தில் பணியாற்றுகிறார்’ எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர். முதியவரை யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் இன்று மாலை காவல்துறையினர் முற்படுத்தினர். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போன்று நடந்துகொள்கிறார் என நீதிவானிடம் காவல்துறையினர் தெரிவித்தனர்.

‘முதியவரின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும். எனவும் எதிர்வரும் 16ஆம் திகதி வரை சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் சி.சதீஸ்தரன் உத்தரவிட்டார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.