இலங்கை பிரதான செய்திகள்

சின்மயா மிஷனின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் ஆன்மீக அருளுரை….

சின்மயா மிஷனின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் நடத்தப்பட்ட வாழ்க்கை வழிநுட்பங்கள் எனும் தலைப்பில் அமைந்த ஆன்மீக அருளுரை கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் நேற்று (08.01.2018) சின்மயா மிஷனின் உலகளாவிய தலைவர் முக்ய சுவாமி ஸ்வரூபானந்தாஜி தலைமையில் இடம்பெற்றது .

இந்த நிகழ்வில் திருகோணமலை சின்மயா மிஷன் வதிவிட ஆச்சாரியார் பிரம்மச்சாரனி மகிமா சைதன்யா கிளிநொச்சி சின்மயா மிஷன் வதிவிட ஆச்சாரியார் பிரம்மச்சாரி சிவேந்திர சைதன்யா ஆகியோர் பிரதம விருந்தினராகவும் கரச்சி பிரதேசசெயலர் த.முகுந்தன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிபிள்ளைஆகியோரும் கலந்து சிறப்பித்தனர் .மேலும்

எவ்வாறு மன நின்மதி உடன் வாழலாம் ? என  ஸ்ரீ மத் பகவத்கீதையில் இருந்து எடுத்து காட்டு மூலம் விளக்கப்பட்டதுடன் நாம் பிறருக்கு ஏதாவது உதவி செய்வதன் மூலம் நாமும் இன்புற்று பிறரையும் இன்புற செய்யலாம் போன்ற மார்க்க முறைமையும் விளக்கமளிக்கப்பட்டது  இந்நிகழ்வில் , துறவியர்கள், குருமார்கள், சமயப் பெரியார்கள் மற்றும் துறைசார் ந்தோர் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

 

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.