இலங்கை பிரதான செய்திகள்

ராஜபக்ஸவின் இருண்ட ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட கொலைகளுக்கு எதிராக நீதி நிலைநாட்டப்படும்…

லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டு 9 வருடங்களும் நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்து 3 வருடங்களும் இப்துபோது கடந்து விட்டன. ராஜபக்ஸவின் இருண்ட ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட கொலைகளுக்கு எதிராக நீதியை நிலைநாட்ட நல்லாட்சி அரசு இன்றுவரை அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருகிறது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று வெளியிட்டுள்ள  அறிக்கையில்  மூலம் வெளியிட்டிருந்தார். பிரதமர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில்,

ஊழல் நிறைந்த அரசுக்கு எதிராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தானும் கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் 21ம் திகதி நல்லாட்சிக்காக அரசியல் போராட்டத்தில் கைகோர்தோம். நாங்கள் நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டுமானால் 2015ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதி எமக்கு வாக்களிக்குமாறு வேண்டியிருந்தோம்.

இலங்கையின் பொருளாதாரத்தை முன்னேற்றி, அரசாங்கத்தின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத வன்முறையை ஒழிப்பதற்கும், நமது சட்ட முறைமை மற்றும் குற்றவியல் நீதி அமைப்பு முறையின் சுயாதீனத்தன்மை மற்றும் கௌரவத்தை பாதுகாப்பதற்கும் நாங்கள் உறுதியளித்தோம்.

இப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற இன்னும் பல காலம் தேவைப்பட்டாலும், இதுவரை கடந்து வந்த பயணத்தில் பல தடைகளுக்கும் சவால்களுக்கும் வெற்றிகரமாக முகங்கொடுத்ததை எண்ணி மகிழ்ச்சி அடைகிறோம் என்று பிரதமர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில், 17 வது திருத்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், அரசியலமைப்பு சபை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டதன் மூலம் பொலிஸ், நீதித்துறை, அரச சேவை ஆகியவற்றை விரிவுபடுத்தவும், அரசியல்வாதிகளின் கட்டளைகளுக்கு அடிபணியாது மனசாட்சியுடன் சேவை வழங்கவும் சுதந்திரமளிக்கப்பட்டது.

இலங்கை பிரஜைகளுக்கு தகவல் அறிவதற்கான சட்டத்தை இயற்றியதோடு, குற்றத்திற்கு ஆளானவர்களுக்கும், நீதியின் முன்னால் நிற்கும் சாட்சியாளர்களுக்கும் உதவி மற்றும் பாதுகாப்புக்கான உரிமையை உறுதிப்படுத்தியுள்ளோம்.

நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக அரசிற்கு எதிரான சிக்கலான நிதியியல் குற்றங்களை விசாரணை செய்வதற்கும், நீதிக்கு முன் கொண்டு வருவதற்கும் பொலிஸிற்கு அதிகாரம் வழங்கப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இப்போதைக்கு லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டு 9 வருடங்களும் நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்து 3 வருடங்களும் கடந்து விட்டன. ராஜபக்ஷவின் இருண்ட ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட கொலைகளுக்கு எதிராக நீதியை நிலைநாட்ட நல்லாட்சி அரசு இன்றுவரை அர்ப்பனிப்புடன் ஈடுபட்டு வருகிறது.

ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகளை நடத்தியவர்களுக்கு எதிராக நீதி பயன்படுத்தப்படுமென நாங்கள் உறுதியளிப்பதோடு, அந்த நோக்கத்திற்காக அரசு மேலும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers