தமிழ் சினிமாவில் தன் வேலைகளில் மூக்கை நுழைக்காத ஒரே நடிகர் அஜித் குமார் தான் என இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார் . முன்னணி இயக்குனரான கே.எஸ்.ரவிக்குமார் தற்போது தெலுங்கில் நந்தமுரி பாலகிருஷ்ணா – நயன்தாராவை வைத்து ஜெய் சிம்ஹா என்கின்ற படத்தை இயக்கியுள்ளார். சங்க்ராந்தியை முன்னிட்டு இந்த படம் வெளியாகவுள்ள நிலையில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அனைத்து நடிகர்களுமே கதை, காட்சிகள், படப்பிடிப்பு என மாற்றங்களை கொண்டு வர விரும்புவார்கள். அதை இப்படி பண்ணலாமா? இதை அப்படி பண்ணலாமா? குதை வசனங்களை இப்படி மாற்றலாமே? என நிறைய கேட்பார்கள். ஆனால் தான் அதை தவறு என்று சொல்லவில்லை. எதையாவது புதுமையாக, அவர்களை நல்ல விதமாக காட்டுவதற்காக அப்படி கேட்பதில் தவறு இல்லை.
ஆனால் இந்த கட்டம் எதற்கு? இது கதைவசனத்தினை மாற்றலாமா? என எதிலுமே இரண்டு நடிகர்கள் மட்டும் எனது விஷயத்தில் தலையிட்டதே இல்லை. அவர்களில் ஒருவர் அஜித் குமார், மற்றொருவர் பாலையா எனத் தெரிவித்துள்ளார். கே.எஸ்.ரவிக்குமார், அஜித்தை வைத்து வரலாறு என்னும் படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Add Comment