பிரதான செய்திகள் விளையாட்டு

ஐ.பி.எல் தொடரில் விளையாட வேண்டாமென ஜோ ரூட்டுக்கு அறிவுறுத்தல்


எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐ.பி.எல். தொடருக்கான ஏலத்தில் ஜோ ரூட் பங்கேற்க கூடாது என இங்கிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளர்  ட்ரெவர் பேலிஸ்பெய்லிஸ்(Trevor Bayliss.)  கோரிக்கை விடுத்துள்ளார். அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஆஷஸ் தொடரில், அவுஸ்திரேலியா 4-0 என்ற ரீதியில் வெற்றி பெற்றிருந்தது.


இந்நிலையில், இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட் ஐ.பி.எல். தொடரில் தொடரில் விளையாட கூடாது என பயிற்றுவிப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.  சுமார் 2 மாதத்திற்கும் மேலாக நடைபெற்ற ஆஷஸ் தொடரினால் இங்கிலாந்து வீரர்கள் மிகவும் சோர்வடைந்துள்ளனர் எனத் தெரிவித்த அவர் ஜோ ரூட் தற்சமயம் நல்ல நிலையில் இல்லாததாலும், இங்கிலாந்து அணிக்கு அடுத்தடுத்த தொடர்களில் விளையாட இருப்பதாலும், அவர் ஐ.பி.எல். தொடரில் விளையாடாமால், தனது விளையாட்டை மேம்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply