இலங்கை பிரதான செய்திகள்

சபாநாயகர் உரிய முறையில் பாராளுமன்றை வழிநடத்தவில்லை – ஜே.வி.பி.


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சபாநாயகர் கரு ஜயசூரிய உரிய முறையில் பாராளுமன்றை வழிநடத்தவில்லை என ஜே.வி.பி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். சபாநாயகரின் அசமந்த போக்கினால் பாராளுமன்றில் இடம்பெறக்கூடாத பல விடயங்கள் இடம்பெற்றதாகத் தெரிவித்துள்ளார்.


நேற்றைய தினம் பாராளுமன்றில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். பாராளுமன்றில் பிரதமரின் உரைக்கு சபாநாயகர் சந்தர்ப்பம் வழங்கியதே பிரச்சினைக்கான காரணம் என குறிப்பிட்டுள்ள அனுரகுமார திஸாநாயக்க இந்த முரண்பாட்டு நிலைமைகளினால் தாம் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.