0
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 750 லட்சம் ரூபா சொத்துக்கள் தொடர்பான வருமான வழிகளை காண்பிக்கத் தவறியதாக விமல் வீரவன்ச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி விகும் களுவாராச்சி இது தொடர்பான உத்தரவினை பிறப்பித்துள்ளார். இந்த வழக்கு விசாரணை தொடர்பில் விமல் வீரவன்சவிற்கு பிணை வழங்குவதற்கு நீதிபதி தீர்மானித்துள்ளார்.
இதன்படி தலா ஐந்து லட்சம் ரூபா அடிப்படையிலான இரண்டு சரீரப் பிணைகளின் அடிப்படையில் பிணை வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு எதிர்வரும் 19ம் திகதி மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
Spread the love