இந்தியா பிரதான செய்திகள்

பினராயி விஜயனுக்கு உச்ச நீதிமன்றம் அழைப்பாணை…

ஊழல் வழக்கிலிருந்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐ தொடர்ந்த வழக்கில், அவருக்கு உச்ச நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பி உள்ளது. கடந்த 1990-களில் பினராயி விஜயன் கேரள மின்துறை அமைச்சராக பதவி வகித்தபோது செயல்படுத்தப்பட்ட 3 நீர்மின் திட்டங்களில் ஊழல் நடந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இது தொடர்பாக விஜயன் உள்ளிட்ட10 பேர் மீது சிபிஐ வழக்கு தொடுத்துற்ற நிலையில் இதை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம் விஜயன் உள்ளிட்ட 7 பேரை விடுவித்ததுடன் ஏனைய 3 பேருக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து சிபிஐ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போதே இந்த விவகாரம் தொடர்பாக பதில் அளிக்குமாறு விஜயன் உள்ளிட்ட 7 பேருக்கு அழைப்பாணை அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap