உலகம் பிரதான செய்திகள் விளையாட்டு

அவுஸ்திரேலிய ஓபன் போட்டியில் பெடரர், பிடேனை எதிர்த்தாட உள்ளார்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரில் நட்சத்திர வீரர் ரொஜர் பெடரர், ஸ்லோவேனியாவின் அலிஷ் பிடேன் (  Aljaz Bedene ) ஐ எதிர்த்து போட்டியிட உள்ளார். சுவிட்சர்லாந்தின் பெடரர் கடந்த ஆண்டு நடைபெற்ற அவுஸ்திரேலிய ஓபன் போட்டித் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


ரோமானியாவின் சிமோனியா ஹலெப் அவுஸ்திரேலியாவின் டெஸ்டனி அய்வாவை எதிர்த்தாட உள்ளார். உலக டென்னிஸ் தர வரிசையின்  அடிப்படையில்  சிமோனியா முதல் இடத்தை வகித்து வருகின்றார். கடந்த ஆண்டு சம்பியன் பட்டம் வென்ற செரீனா வில்லியம்ஸ் இந்த ஆண்டு போட்டியில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply