உலகம் பிரதான செய்திகள்

ஜூலியன் அசாஞ்சேவுக்கு குடியுரிமை வழங்கப்படும் – ஈக்வடார்

​விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு குடியுரிமை வழங்கப்படும் என ஈக்வடார் அரசு அறிவித்துள்ளது. ஜூலியன் அசாஞ்சே அமெரிக்காவின் பல்வேறு ரகசியங்களை இணைய தளங்களில் வெளியிட்டிருந்தார்.

பாதுகாப்பு ரகசியங்களை வெளியிட்ட அசாஞ்சேவை கைது செய்ய அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில் அவர் லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் இரண்டு ஆண்டுகளாக தஞ்சம் அடைந்திருந்தார்.

இந்தநிலையில், பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கில் கடந்த 2010-ம் ஆண்டு சுவீடன் நாட்டு கீழ் நீதிமன்றம் அசாஞ்சேவுக்கு பிறப்பித்த பிடியாணை உத்தரவு அவர் செய்த மேன்முறையீட்டினை தொடர்ந்து நேற்றையதினம் ரத்து செய்யப்பட்டுள்ளது  இந்நிலையில், அசாஞ்சேவுக்கு எங்கள் நாட்டு குடியுரிமை வழங்கப்படும் என ஈக்வடார் அரசு அறிவித்துள்ளது.

அசாஞ்சேவுக்கு பாதுகாப்பான இடம் கிடைக்கும் வரை ஈக்வடார் தூதரகத்திலேயே தங்கலாம் எனவும் சுவீடன் அதிகாரிகள் அவரிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்திக் கொள்ளலாம் என ஈக்வடார் வெளியுறவுத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply