இலங்கை பிரதான செய்திகள்

இராணுவ தலையீடு குறித்து முறைப்பாடு இல்லை….

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

வடக்கு தேர்தலில் இம்முறை இராணுவ தலையீடுகள் தொடர்பில் முறைபாடுகள் கிடைக்க பெறவில்லை என கபே அமைப்பின் நிறைவேற்று அதிகாரி கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபை தேர்தல் சட்ட திருத்தங்கள் மற்றும் பெண்கள் பிரதிநிதித்துவம் தொடர்பில் வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் நடைபெற்றது.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கடந்த கால தேர்தலிகளில் வடக்கில் குறிப்பாக யாழில் இருந்து தேர்தல் நடவடிக்கைகளில் இராணுவத்தினரின் தலையீடுகள் உள்ளதாக அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்க பெற்றன. ஆனால் இம்முறை தேர்தல் நடவடிக்கைகளில் இராணுவ தலையீடுகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்க பெறவில்லை. என தெரிவித்தார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply