உலகம் பிரதான செய்திகள் விளையாட்டு

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் வடகொரியாவை பங்கேற்கச் செய்வதில் தென்கொரியா தீவிரம்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் வடகொரியாவை பங்கேற்கச் செய்வதில் தென்கொரியா தீவிரம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் மாதத்தில் தென்கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் இவ்வாறு தீவிரம் காட்டப்பட்டு வருகின்றது. வடகொரியாவை பங்கேற்கச் செய்வது தொடர்பில் செயல்மட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளதாக தென்கொரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.


தென்கொரியாவின் பிரதி அமைச்சர் ஒருவர் உள்ளிட்ட மூவர் அடங்கிய குழுவினர் எதிர்வரும் 15ம் திகதி வடகொரிய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த வாரத்தின் ஆரம்பத்தில் இரு தரப்புக்களுக்கும் இடையில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பில்; பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply