இலங்கை பிரதான செய்திகள்

கூட்டணி கட்சிகளிடம் ஜனாதிபதி கருத்துக் கேட்டிருக்கலாம் – ஐ.தே.க


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் கூட்டணி கட்சிகளிடம் கருத்து கேட்டிருக்கலாம் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. தனது பதவிக் காலம் தொடர்பில் உச்ச நீதிமன்றின் சட்ட விளக்கத்தை கோருவதற்கு முன்னதாக கூட்டணி கட்சிகளிடமும் நிலைப்பாட்டை கேட்டறிந்திருந்தால் அது சிறந்ததாக அமைந்திருக்கும் என அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்த நடவடிக்கையானது கூட்டணி கட்சிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் பதவிக் காலம் ஆறு ஆண்டுகள் என உச்ச நீதிமன்றம் அறிவித்தாலும், ஜனாதிபதிக்கு தேவையென்றால் பதவிக் காலத்தை ஐந்து ஆண்டுகளில் முடிவுறுத்தி முன்கூட்டியே தேர்தல்களுக்கு செல்ல முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply