இலங்கை பிரதான செய்திகள்

சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா தீர்மானம்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு எதிராகவும் நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் கைகலப்பு ஏற்படும் நிலைமை அண்மையில் ஏற்பட்டிருந்தது.சபாநாயகரின் நடவடிக்கைகளினால் இந்த நிலைமை ஏற்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு புறம்பான வகையில் சில வேளைகளில் சபாநாயகர் பாராளுமன்றில் நடந்து கொள்வதாகத் தெரிவித்துள்ளார். சபாநாயகரின் நடவடிக்கைகள் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜே.வி.பி மற்றும் கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் அதிருப்தி கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். நாளுக்கு நாள் பாராளுமன்றின் நிலைமை மோசமடைந்து செல்வதாகவும் இதனால், சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply