இலங்கை பிரதான செய்திகள்

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தமிழீழத்தை அங்கீகரத்து விட்டதா ? நாமல்

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தமிழீழத்தை அங்கீகரத்து விட்டதா என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ கேள்வ எழுப்பியுள்ளார். தனது டுவீட்டர் பக்கத்தில் அவர் இந்தக் கேள்வயை எழுப்பியுள்ளார். நேற்றையதினம் யாழில் இடம்பெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரகட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வில் தமிழீழ புரட்சி பாடல்கள் ஒலிக்கவிடப்பட்டிருந்தமை தொடர்பிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்று ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வின் ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட புரட்சி பாடல்கள் ஒலிக்க விடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை தேர்தல் பரப்புரை கூட்டங்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பாடல்களை ஒலிக்க விடுவது தேர்தல் விதிமுறை மீறல் மாத்திரமல்ல சட்டவிரோதமும் கூட என கபே அமைப்பும் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Leave a Reply