இந்தியா பிரதான செய்திகள்

குஜராத்தில் இளைஞர்களுக்கான சிறப்பு முகாம் தீ விபத்தில் 3 மாணவிகள் பலி…

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் இளைஞர்களுக்கான சிறப்பு முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 மாணவிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஒருங்கிணைப்பு, சமூக நல்லிணக்கம் மற்றும் தற்காப்பு கலைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இளைஞர்களை தயார்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் இந்த முகாமில், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்தநிலையில், நேற்று இரவு இந்த முகாமில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு படை வீரர்கள கட்டுப்படுத்த முயன்ற போதும் தீ அனைத்து இடங்களிலும் பரவியதால் தீயில் சிக்கி 3 மாணவிகள் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்கசிவினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.